18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவரை கைது செய்த மதுரை போலீசார்

பெண் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவரை கைது செய்த மதுரை போலீசார்

எழுதியவர்: mohan September 7, 2019, 3:26 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உமாதேவி(45) என்பவர், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உத்தப்பநாயக்கனூர் அரசு பாலிடெக்னிக் அருகே உள்ள மொட்டமலையில் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இந்த வழக்கில் தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் மேகிழார்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம்(51) என்பவனை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் கிணற்றுக்குள் தள்ளி தான் கொலை செய்ததாக ஒத்துக் கொண்டான்.மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஆட்டோ டிரைவர் அருண்குமார்(20) ஆகிய இருவர் மீது  படி வழக்குப் பதிவு செய்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!