இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உடையநாதபுரத்தைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் சதீஷ்குமார்,36. இவரது மனைவி சண்முகசுந்தரி,24. இவர்களுக்கு 13 வயது மகள் உள்ளார். கடந்த 24.01.2012 மாலை ரமேஷ்குமார், மது குடிக்க சண்முகசுந்தரியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் தர மறுத்த சண்முகசுந்தரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து, வீட்டை பூட்டிவிட்டுச் தப்பினார். சண்முகசுந்தரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக ரமேஷ்குமார் மீது அபிராமம் போலீசார்கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இன்று நடந்த இறுதி விசாரணையில், சண்முகசுந்தரியை எரித்துக் கொன்ற ரமேஷ்குமாருக்குஆயுள் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.பகவதியம்மாள்தீர்ப்பு அளித்தார் அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை இராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
எழுதியவர்: mohan September 7, 2019, 11:40 am




You must be logged in to post a comment.