18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு செட் டாப் பாக்ஸ் செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அறிவிப்பு

அரசு செட் டாப் பாக்ஸ் செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அறிவிப்பு

எழுதியவர்: mohan September 6, 2019, 6:35 pm

மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் மட்டுமே டிவி சேனல்களின் ஒளிபரப்பை கண்டுகளிக்க ஆணையிட்டு அதன்படி நாடு முழுவதும் பழைய முறையிலான “அனலாக்” முறை ஒளிபரப்பு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மத்திய அரசுடன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று கட்டுப்பாட்டு அறை அமைத்து 1.9.2017 முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி உயர் தொழில் நுட்பத்தில் துல்லிய (டிஜிட்டல்) முறையில் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமறை ஆணையம் (டிராய்) விதிமுறைகளின்படி “அனலாக்” முறையில் சிக்னலில் ஒளிபரப்புவது செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு, சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யும் ஆபரேட்டர்கள் உடனடியாக ஒளிபரப்பை நிறுத்தம் செய்து சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும். மீறினால் சட்டப்படி ஆபரேட்டர்களது ஒளிபரப்பு உபகரணங்களை பறிமுதல் செய்து,கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கேபிள் டிவி ஆபரேட்டர், அஞ்சலக உரிமம் ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதக்கட்டணத்தொகையான ரூ.154 (வரிகள் உட்பட) என நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.மேலும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொண்ட ஒரு சில ஆப்ரேட்டர்கள், அரசு செட்டாப்பாக்ஸ்களை செயலாக்கம் செய்யாமல் தனியார் நிறுவனங்களிடம் செட்டாப் பாக்ஸ்களை பெற்று ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இவர்கள், உடனடியாக அரசு செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அரசால் வழங்கப்பட்ட விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பின் அதனை ஆபரேட்டர்கள் மூலம் செயலாக்கம் செய்ய வேண்டும். தாங்கள் குடியிருப்பு வீட்டை காலி செய்து விட்டு, வேறு பகுதிக்கு செல்லும் போது,அல்லது வேறு இணைப்பிற்கு மாறினாலோ தாங்கள் பெற்ற அரசு செட்டாப் பாக்ஸை ஆப்ரேட்டரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!