17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாகன ஓட்டிகளின் மனதை வென்ற ஆலங்குளம் காவலர்கள்

வாகன ஓட்டிகளின் மனதை வென்ற ஆலங்குளம் காவலர்கள்

எழுதியவர்: mohan September 6, 2019, 6:02 pm

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பஜார் பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் சாலை உடைபட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதால் இதனை தடுக்க 01.09.2019-ஆம் தேதியன்று ஆலங்குளம் காவல் நிலைய காவலர்கள்ஆனந்தராஜ் மற்றும் .ஜெய பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சாலையில் குண்டும் குழியுமாக இருந்த இடத்தை JCB இயந்திரம் வரவழைத்து பொதுமக்கள் உதவியோடு சாலையை சமன் செய்தனர். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சென்று வருகின்றனர்.

இரவு நேரம் என்றும் பாராமல் பொதுப்பணியில் ஈடுபட்ட காவலர்களை பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.ஆலங்குளம் காவல் துறையினர் செய்த இத்தகைய பொதுப்பணி பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!