18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் நம் “குழந்தை பத்திரம்” நூல் வெளியீட்டு விழா

இராமநாதபுரத்தில் நம் “குழந்தை பத்திரம்” நூல் வெளியீட்டு விழா

எழுதியவர்: mohan September 6, 2019, 5:41 pm

கல்வி ஆலோசகர் முனைவர் அ.சங்கரலிங்கம் எழுதிய நம் குழந்தை பத்திரம் நூல் வெளியீட்டு விழா இராமநாதபுரத்தில் நடைபெற்றது.ராமநாதபுரம் கம்பன் கழகத் தலைவர் ஆடிட்டர் அரிமா எம்.ஏ.சுந்தரராஜன் தலைமை வகித்தார். சு.மா.ஆதர்ஷியா இறை வாழ்த்து பாடினார். நேஷனல் அகாடமி பள்ளி குழும தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா முன்னிலை வகித்தார். டாக்டர் ச.ஜெ.அஸ்வின் துரை வரவேற்றார். செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளரும், ரோட்டரி முன்னாள் ஆளுநருமான டாக்டர் சின்னதுரை அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சேலம் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை கவிஞர் ஏகலைவன் புத்தக அறிமுகவுரை ஆற்றினார். நூலாசிரியர் முனைவர் சங்கரலிங்கத்தை நேஷனல் அகாடமி ஐசிஎஸ்இ பள்ளி முதல்வர் டாக்டர் வ.ஜெயலட்சுமி அறிமுகம் செய்து பேசினார். கனகமணி கிளினிக் மகப் பேறு தலைமை டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் சிறப்புரை ஆற்றினார். ஆப்டிகல் பேபஸ் உரிமையாளர் எம்.பாஷா வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் (ஓய்வு) ச.அப்பாதுரை முதல் பிரதியை வெளியிட்டார். பொதுப்பணி துறை ஆட்சி அலுவலர் (ஓய்வு) சி.வள்ளி நாயகம், நெய்வேலி நிலக்கரி கழக மின்னியல் பிரிவு துணை பொது மேலாளர் வே.வேலப்பன், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் கு.கேசவராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நம் குழந்தை பத்திரம் நூலாசிரியர் முனைவர் அ.சங்கரலிங்கம் ஏற்புரை வழங்கினார். ச.ஜெ.பத்ம தர்ஷினி நன்றி கூறினார். திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை சே.தமிழரசி உதயகுமார் தொகுத்து வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!