17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » பிற செய்திகள் » தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக பங்குனி உத்திர திருவிழாவில் மோர்ப்பந்தல்..

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக பங்குனி உத்திர திருவிழாவில் மோர்ப்பந்தல்..

எழுதியவர்: ஆசிரியர் April 9, 2017, 3:20 pm

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட மையத்தின் சார்பில் இன்று(09-04-17) நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மோர் பந்தல் மற்றும் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இராமநாதபுரம் தாலூகா அலுவலக நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் சுமார் 6000 பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அன்னதானம், பானக்கம், தண்ணீர், மோர் போன்ற தாகம் தீர்க்கும் பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இப்பணியை இராமநாதபுரம் தாலுகா அலுவலக சங்கத்தினர் தொடர்ந்து 52 வது ஆண்டாக செய்து வருகிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரிய காரியம்.

இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!