இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம்,பன்னாட்டு அரிமா சங்கங்கள் மாவட்டம் , இராமநாதபுரம் லைப் சேவர்ஸ் அரிமா சங்கம், இராமநாதபுரம் கோல்டு அரிமா சங்கம் சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார விழா பேரணி நடந்தது. அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.ஜவஹர்லால் தலைமை வகித்தார். அரிமா மாவட்ட அமைச்சரவை இணை செயலாளர் அபர்ணா ஆர்.வெங்கடாசலம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். லைப் சேவர்ஸ் அரிமா சங்க பட்டயத் தலைவர் ஏ.வி.சதீஷ்குமார் தொடங்கி வைத்தார். இராமநாதபுரம் கோல்டு
அரிமா சங்க தலைவர் எஸ்.சரவணன், இராமநாதபுரம் லைப்சேவர்ஸ் அரிமா சங்க தலைவர் சி.ஏகாம்பரம் ஆகியோர் பேசினர். மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு திட்ட அலுவலர் டாக்டர் எஸ்.சுபாசங்கரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.சுப்ரமணியன், லைப் சேவர்ஸ் அரிமா சங்க செயலாளர் டி.சீனிவாசன், கண் தான ஒருங்கிணைப்பாளர் ஏ.சீனிவாசன், .அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், அரிமா சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி அரசு மருத்துவமனையை வந்தடைந்தது
இராமநாதபுரத்தில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி
எழுதியவர்: mohan September 6, 2019, 11:06 am




You must be logged in to post a comment.