இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று நடந்தது. தலைமை ஆசிரியை எஸ்தர் வேணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.சோமசுந்தரம் தலைமை வகித்தார். ஆசிரியை (ஓய்வு) கஸ்தூரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.ஓய்வு ஆசிரியை கஸ்தூரிக்கு மாணவர் மாணவியர் பூங்கொத்து கொடுத்து கரஒலி எழுப்பி வரவேற்றனர். கஸ்தூரிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்தினர்.6, 7, 8 ம் வகுப்பு மாணவர்கள் ஆசியர் வேடமிட்டு பாடம் நடத்தினர். பேச்சு, ஓவிய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி ஆசிரியைகள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி மேலாண் குழு தலைவர் பர்வீன், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நாராயணன், ஆசிரியைகள் ராமேஸ்வரி, பாமா, விஜயகுமாரி, மீனா, மேகலா, சீனிவாசகன், ஞானசவுந்தரி, பவானி, சுந்தரி, முத்துலட்சுமி கலந்து கொண்டனர்.ஆசிரியை தௌலத் நிஷா பேகம் நன்றி கூறினார்.
இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா.
எழுதியவர்: mohan September 5, 2019, 5:36 pm




You must be logged in to post a comment.