17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

எழுதியவர்: mohan September 5, 2019, 3:32 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் என்.கோமகன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் திருமேனி நாயகம் முன்னிலை வகித்தார். ராதா கிருஷ்ணன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள் பி.ஹரிதா ஷினி, க. தருண் பாலன், ம.ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. சத்துணவு அமைப்பாளர் தங்கம், அங்கன்வாடி பணியாளர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!