18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இயற்கை வளத்தை மீட்டெடுக்க மாணவர்களுக்கு 2000 மரக்கன்று…! – சேலம் இளைஞர்கள் அசத்தல்

இயற்கை வளத்தை மீட்டெடுக்க மாணவர்களுக்கு 2000 மரக்கன்று…! – சேலம் இளைஞர்கள் அசத்தல்

எழுதியவர்: mohan September 5, 2019, 1:19 pm

சேலம் அருகே, நீராதாரத்தை பெருக்கி இயற்கை வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, பள்ளி மாணவ – மாணவியருக்கு இரண்டாயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.சேலம் மாவட்டம் தப்பக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருங்கிணைந்து, ‘நம்மாழ்வார் வழி இயற்கை மீட்டெடுப்பு குழு’ எனும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.கடந்த மாதம் இந்த அமைப்பினர், ஏரிகளில் வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றி அங்கு பனை உட்பட இரண்டாயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிலையில், தப்பக்குட்டை, எளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பயிலும் மாணவ – மாணவியருக்கு கொய்யா, நாட்டுநெல்லி, மரநெல்லி போன்ற விட்டமின் சத்து தரும் தலா 2 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் இரண்டாயிரம் மரக்கன்றுகள் வழங்கினர்.இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், “அதிக மரம் வளர்ப்பதனால் கிராமங்கள் பசுமையடைந்து, நீராதாரம் பெருகும். மற்ற பகுதி இளைஞர்களும் இதுபோல் செயல்பட்டால் இயற்கை வளத்தை உறுதியாக மீட்டெடுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.

நம்மாழ்வார் வழி இயற்கை மீட்டெடுப்பு குழுவினரின் இந்த முயற்சியை, சேலம் மாவட்ட பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றர்.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!