17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரணத்தை தேடி செல்லும் கல்லூரி மாணவர்கள்.. கண்டுகொள்ளாத அரசு போக்குவரத்து நிர்வாகம் ..

மரணத்தை தேடி செல்லும் கல்லூரி மாணவர்கள்.. கண்டுகொள்ளாத அரசு போக்குவரத்து நிர்வாகம் ..

எழுதியவர்: mohan September 5, 2019, 1:10 pm

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கீழப்பட்டி செல்லும் அரசு பேருந்து அதிக அளவிலான மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்கிறது. மாணவர்கள் படிகளையும் ஜன்னல்களையும் தொங்கிக் கொண்டு பயணம் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது .. தினம் தினம் மரணத்தை கையில் பிடித்துக்கொண்டு கல்லூரி செல்லும் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது..

இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் கல்லூரி நேரங்களில் அதிக அளவு பேருந்துகளை விட்டு கல்லூரி மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டுமென பெற்றோர்களும் மாணவர்களும் பொது மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர் ..அதிக ஆட்களை ஏற்றிச் சென்றால் அபராதம் விதிக்கும் காவல்துறை இதுபோன்ற பேருந்துகளில் அதிக அளவு ஆட்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

வி செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!