உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் மொட்டப்பாறையில் கழுத்து அறுத்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த திராவிடமணி மனைவி உமாதேவி (45) இவர் உசிலம்பட்டி காய்கறிச்சந்தையில் காற்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் உமாதேவி இரவு காய்கறி வாங்குவதற்காக செல்கிறேன் காலையில் வந்து விடுவேன் என கூறி விட்டு சென்றிருந்த நிலையில் வீடு திரும்ப த நிலையில் உத்தப்ப நாயக்கனூர் அருகே மொட்டப்பாறை என்ற இடத்தில் பெண் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே சம்பவ இடத்திற்கு சென்ற பார்த்தபோது அது உமாதேவி என தெரிய வந்தது உமாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் மொட்டப்பாறையில் கழுத்து அறுத்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் .. போலீசார் விசாரணை ..
எழுதியவர்: mohan September 5, 2019, 12:25 pm




You must be logged in to post a comment.