உசிலம்பட்டி அருகே மரணத்திலும் இணைபிரியா தம்பதியாக கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்த சதாசிவம் நூலகராக பணியாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். இவர் நேற்று 04.09.2019 மதியம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், கணவர் இறந்த சோகத்தில் இருந்த மனைவி சரோஜா துக்கம் தாங்க முடியாமல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரவு ஒரு மணியளவில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 50 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர், திருமண வீடு, உறவினர் வீடு என எங்கு சென்றாலும் அனைத்து இடங்களிலுக்கும் ஒன்றாக செல்வதுதான் வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது.மேலும் சதாசிவத்தின் மனைவி சரோஜா எனது கணவர் எப்போது இறந்தாலும் நானும் அவருடன் சென்று விடுவேன் என அடிக்கடி கூறி வந்தாகவும் அவர் இறந்த நாளே மனைவி சரோஜாவும் தன் உயிரை இழந்துள்ளார்.வாழ்வில் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த சதாசிவம் சரோஜா தம்பதியர் மரணத்திலும் இணைபிரியாமல் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.