திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் இந்தியன் வங்கி கிளையில் தினம் தோறும் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வங்கிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் வங்கியில் பணிபுரியும் பணியாளர்கள் வங்கிக்கு வரும் பயனாளிகளை அவதூறாகப் பேசியும் பல்வேறு சந்தேகங்கள் குறித்து பணியாளர்களை கேட்டால் மிரட்டும் தோணியில் ஈடுபட்டும் தகாத வார்த்தைகளில் பேசியும் பயனாளிகள் மனதை புண்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர்.
மேலும் வங்கியில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளர் செல்வம் உள்ளூர் வாசி என்பதால் அவரை வைத்துக்கொண்டு வங்கி ஊழியர்கள் பொதுமக்களை மிரட்டியும் உங்களுடைய தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாது என மிரட்டியும் வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும் மண்டல வங்கி மேலாளரும் செங்கம் இந்தியன் வங்கிக்கு நேரில் ஆய்வு செய்து பொதுமக்களை மிரட்டியும் தங்களின் சந்தேகங்களை கோட்கவரும் பொதுமக்களை ஏவலமாக பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.




You must be logged in to post a comment.