18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில்  வள்ளி நகர் பொதுமக்கள் புகார்

நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில்  வள்ளி நகர் பொதுமக்கள் புகார்

எழுதியவர்: mohan September 4, 2019, 7:35 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள வள்ளி நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக சிலை  வைக்கப்பட்டு இளைஞர்கள் அக்கிராமத்தில் ஆடல் பாடலுடன் ஒலிபெருக்கி உடல் ஊர்வலமாக சென்று கட்டி வைகையாற்றில் விசர்சனம் செய்தனர்.       அணைப்பட்டி வைகையாற்றில் விநாயகர் சிலையை கரைத்துவிட்டு வள்ளி நகரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக திரண்டு மினி வேனில் வந்து வள்ளி நகர் பகுதியில் ஆட்டம் பாட்டம் போட்டு வீட்டிற்கு சென்றனர்.        அப்போது அதே ஊரைச் சேர்ந்த சென்னையில் போலீஸ்காரராக வேலை செய்யும் மணி பாபு என்பவரும் அவரது குடும்பமும் சேர்ந்து  பெண்களை இழிவாக பேசியும்,  அவதூறாக பேசியுள்ளார். இதனை கண்டித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்த வள்ளி நகரைச் சேர்ந்த பெண்கள் இழிவாக பேசி வரும் மணி பாபு, மற்றும் குடும்பத்தின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து புகார் மனு கொடுத்தனர்.   சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் இதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து வந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் ம, ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!