‘திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் பெரியார் நகரில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது!! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெரியார் நகர் துக்காப்பேட்டை உள்ள ஸ்ரீ அருள் தரும் விநாயகருக்கு இளைஞர்கள் மட்டும் ஊர் பெரியவர்கள் இணைந்து 22 ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை விநாயகரை அலங்கரித்து மேலத் தாளத்துடன் முக்கிய வீதிகளில் உலா வந்து சகாய மாதா தெருவில் வைக்கப்பட்டது, செவ்வாய்கிழமை அன்று சிறியவர்கள் மட்டும் இளைஞர்கள் இணைந்து பாட்டுப் போட்டி ,நடனப்போட்டி, ஓட்டப்பந்தயம் ,மியூசிக் சேர் இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,புதன்கிழமை விநாயகருக்கு சிறப்பு பூஜை அளிக்கப்பட்டது அதை தொடர்ந்து, திருப்பதி, பிரபு ,கோபிநாத் தலைமையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதைத்தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.
செங்கம் பெரியார் நகரில்விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்
எழுதியவர்: mohan September 4, 2019, 7:15 pm




You must be logged in to post a comment.