17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மது அருந்திய வாலிபர்களுக்கு மரக்கன்று கையில் கொடுத்து அறிவுரை கூறிய உதவி ஆய்வாளர்

மது அருந்திய வாலிபர்களுக்கு மரக்கன்று கையில் கொடுத்து அறிவுரை கூறிய உதவி ஆய்வாளர்

எழுதியவர்: mohan September 4, 2019, 6:49 pm

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஆண்டோ பிரதீப் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பணங்குடி அருகே காட்டுப் பகுதியில் 4 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அதனை கண்டதும் அவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மது அருந்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துரைத்தார்.மேலும் 4 பேருக்கு ஒவ்வொரு மரக்கன்றுகள் கொடுத்து அவற்றைப் பொது இடத்தில் நட செய்தார்.

அது மட்டுமல்லாமல் தினமும் அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி அதனை செல்போனில் படம் பிடித்து வந்து தன்னிடம் காட்டுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.காவல் ஆய்வாளரின் இந்த செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!