17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

எழுதியவர்: mohan September 4, 2019, 6:14 pm

செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் ( 59) விவசாயி.இவர் அதே கிராமத்தை சேர்ந்த திருமலை என்பவரது விவசாய நிலத்தில் இன்று காலை ஏர் ஓட்ட சென்றார். ஏர் ஓட்டி முடித்த பிறகு விவசாய நிலத்தின் வழியாக ஏர் ஓட்டிய மாட்டுடன் வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தார்.அப்போது விவசாய நிலத்தில் தாழ்வாக அறுந்து தொங்கிய மின்சார ஒயர் எதிர்பாராத விதமாக சம்பத் மீது பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சம்பத் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து சம்பத்தின் மகன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து சம்பத்தின் உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.விவசாயி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!