மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 மற்றும் 76 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின் விளக்கு எரியவில்லை ..இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாகவும் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .இருட்டை பயன்படுத்தி கொள்ளையர்களும் வழிப்பறி செய்பவர்களும் மிகவும் சௌகரியமாக உள்ளது காவல்துறை எவ்வளவுதான் பாதுகாப்பு போட்டிருந்தாலும் அதையும் மீறி இருட்டை பயன்படுத்தி சில இடங்களில் கொள்ளை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது பொதுமக்கள் சிலர் கூறுகையில் மாநகராட்சி மின்சார ஊழியர்கள் சிலர் மின் விளக்கை மின் இணைப்பை தொடர்ந்து துண்டித்து கொள்ளையர்களுக்கு துணைப் இருக்கிறார்களா என சந்தேகம் எழுப்புகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்
எாியாத தெரு விளக்கால் இரவில் நடமாட பொதுமக்கள் அச்சம்
எழுதியவர்: mohan September 4, 2019, 4:14 pm




You must be logged in to post a comment.