இராமேஸ்வரம் அருகே நடராஜபுரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் ஆக.29 ஆம் தேதி கடலூர் சென்றனர். அங்கு பைபர் படகு வாங்கினர். பின்னர் படகு மூலம் கடலூரில் இருந்து 10 பேரும் இராமேஸ்வரம் வந்து கொண்டிருந்தனர். மல்லிபட்டினத்தில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நடுக்கடலில் நிலவிய திடீர் சூறைகாற்றால் படகு மூழ்கியது இதில் படகில் இருந்த 10 பேரும் நடுக்கடலில் மூழ்கினர். அதில் ராஜா மகன் காளிதாஸ்,
முனியாண்டி மகன் செந்தில்வேல் ஆகியோரை உள்ளுர் மீனவர்கள் மீட்டு மல்லிபட்டினம் கடற்கரையில் சேர்த்தனர். முனியாண்டி மகன் நாகசாமி 47, ஆண்டி மகன் ரஞ்சித்குமார் 23 , காந்தி மகன்கள் தரகுடியான் 25, மதன் 26, ஆறுமுகம் மகன் இலங்கேஸ்வரன் 20, ராமகிருஷ்ணன் மகன் கந்தகுமார் 23, சண்முகம் மகன் முனீஸ்வரன் 24, ராஜ் மகன் உமாகாந்த் 19 ஆகியோர் நடுக்கடலில் தத்தளிக்கின்றனர். இவர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சக மீனவர்களால் மீட்கப்பட்ட காளிதாஸ், செந்தில்வேல் ஆகியோர் சிகிச்சைக்காக மல்லிபட்டினம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
கடலில் சூறைக்காற்று படகு மூழ்கியது மாயமான ராமேஸ்வரம் மீனவர் 8 பேரை தேடும் பணி மாயம்
எழுதியவர்: mohan September 4, 2019, 3:07 pm




You must be logged in to post a comment.