மதுரை அரசு இரஜாஜி மருத்துவமனையில் 227 வார்டு பெண்கள் பிளாஷ்டிக் அருவை சிகிச்சை பிரிவு அருகே உள்ள மின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை வந்துள்ளது இதனை தொடர்ந்து நோயாளிகள் தகவல் கொடுத்ததையடுத்து தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர், 227 வார்டில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர் பின்பு செய்தியாளரை சந்தித்த தென் மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் சரவணன் கூறுகையில் தீ விபத்து நடந்த இடத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை எனவும், நோயாளிகளுடன் இருந்தவர்கள் யாரேனும் புகை பிடித்திருக்கலாம் அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் மின் அறையில் புகை பிடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு .
எழுதியவர்: mohan September 4, 2019, 2:57 pm




You must be logged in to post a comment.