17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மோட்டார் அறையில் மின்சாரம் தாக்கி 8 ஆம் வகுப்பு மாணவர் பலி

பள்ளி மோட்டார் அறையில் மின்சாரம் தாக்கி 8 ஆம் வகுப்பு மாணவர் பலி

எழுதியவர்: mohan September 4, 2019, 2:07 pm

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ்- பாக்யலட்சுமி தம்பதியரின் மகன் கார்த்தீஸ்வரன்,13. இவர் அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மின் மோட்டார் ஸ்விட்ச்சை கார்த்தீஸ்வரன்  மதியம் போட முயன்றார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து கார்த்தீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரின் தந்தை ரமேஷ் புகாரின்படி உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!