17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பா.ஜ.க. ஆட்சி தமிழகத்தில் வெகுவிரைவில் வரும்  மாநில செயலாளர் சீனிவாசன் பேச்சு

பா.ஜ.க. ஆட்சி தமிழகத்தில் வெகுவிரைவில் வரும்  மாநில செயலாளர் சீனிவாசன் பேச்சு

எழுதியவர்: mohan September 4, 2019, 1:26 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியில் ஆயிரம்பேர் இணைப்பு விழா நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்தையா தலைமையில் நடைபெற்றது.   விழாவில் மாவட்ட தலைவர் பழனிச்சாமி,மாவட்ட பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் ராஜா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.        இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலச் செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு   சிறப்புரையாற்றி பேசியதாவது:இன்றைக்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடக்கின்ற 1000 பேர்கள் இணைப்பு விழாவை காணும் போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வரும் என்பதில் எந்த விதத்திலும் ஐயமில்லை.      மோடி தலைமையிலான மத்திய அரசு  இளைஞர்களுக்கும் , பெண்களுக்கும்,அடித்தட்டு மக்களுக்கும் பல்வேறுவகையான நலத்திட்டங்களை வழங்கி மக்களின் நலத்தை பாதுகாத்திட பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சி பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலை காரணமாகத்தான் பொதுமக்கள் வாக்காளர்கள் விவசாயிகள் இளைஞர்கள் அனைவரும் ஓட்டுக்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களித்து வருகிறார்கள்.    பாரதிய ஜனதா கட்சியை பொருத்த அளவுக்கு நாட்டு மக்களுக்கு தேவையான சிறப்பான கல்வி, சிறப்பான மருத்துவம் , சுகாதாரமான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் பணியாகும்.  ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என்று யாரேனும் நினைத்தால் நிச்சயமாக கிடைக்காது எனவே தனக்கென்று நினைக்காமல் நமக்கு என்று இருப்பவர்களே பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை தொண்டனாக இருப்பார் என பேசினார்.    ஆயிரம் பேர்களை கட்சியில் இணைத்துக்கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில்  நகரச் செயலாளர் பரசுராமன், மாவட்ட நிர்வாகி கிருஷ்ணகுமார், ஒன்றிய நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சிவா, குமார்,நகர கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!