17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடியில் சக ஆசிரியைக்கு மிரட்டல் . ஓவிய ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

கடலாடியில் சக ஆசிரியைக்கு மிரட்டல் . ஓவிய ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

எழுதியவர்: mohan September 4, 2019, 1:11 pm

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சபுரா காதர்அம்மாள் 32. அதே பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் விஸ்வநாதன் 53. பள்ளி வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை சபுரா காதர்அம்மாளை கைகளால் சைகைகாட்டி, கொலை மிரட்டல் விடுத்தும், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை மீது ஆசிரியர் விஸ்வநாதன் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆங்கில ஆசிரியர் சபுரா காதர் அம்மாள்அளித்த புகாரின் பேரில் கடலாடி போலீசார் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!