இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடந்த திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளும், அளித்த பதில்களும் (விரிவாக)
அப்புறம் என்ன சொல்லுங்க. எது. சரியா சத்தம் போட்டு சொல்லுங்க.எதிர் கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்களே. அது எதிர் கட்சிகளின் நிலை. அவர்கள் அப்படி தான் பேசுவார்கள். அப்புறம். கேளுங்க. அவ்வளவு தானா. ஸ்டாலினை ஐ. நா சபையில் பேசக் கூப்பிட்டதாக அவுங்களாகவே சொல்லிக்கிட்டு இருக்காங்களே. யாரார். திமுக., தலைவர ஐ.நா சபையில பேச அழைச்சதா திமுக காரங்க சொல்லிட்டு இருக்காங்களே. அவர் ஐ.நா சபைக்கு போய் பேசுறதுக்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது. வேற .வெளிநாட்டு பயணம் எப்படி இருக்கு. உறுதியாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மாண்புமிகு முதலமைச்சரின் உறுதியாக வெற்றியுடன் அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ. முனியசாமி, ராமநாதபுரம் நகர் செயலாளர் அங்குச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் உறுதியாக வெற்றியாக அமையும்: கமுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேட்டி
எழுதியவர்: mohan September 4, 2019, 12:36 pm




You must be logged in to post a comment.