18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உணவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயன்ற மனைவி கைது

உணவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயன்ற மனைவி கைது

எழுதியவர்: mohan September 3, 2019, 7:50 pm

இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை அருகே தாவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, 38. இவரது மனைவி பஞ்சவர்ணம், 39. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி உணவில் வைத்து பஞ்சவர்ணத்தை கொல்ல விஷம் வாங்கி வீட்டில் வைத்திருந்தார். இதையறிந்த பஞ்சவர்ணம் , தன்னை கொல்ல வைத்திருந்த விஷத்தை ஆக.31 மதியம் ராமசாமிக்கு கொடுத்த உணவில் பஞ்சவர்ணம் கலந்தார். விஷம் கலந்த உணவை சாப்பிட்ட ராமசாமி மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் ராமசாமியை மீட்டு ராம்நாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க iப்படுகிறது. ராமசாமி புகாரின் பேரில் தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் கொலை முயற்சி வழக்கு பதிந்து பஞ்சவர்ணத்தை கைது செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!