18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் (தெற்கு ) மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் (தெற்கு ) மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

எழுதியவர்: mohan September 3, 2019, 7:46 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் சார்பில் செப்.29 தீவிரவாத எதிர்ப்பு மாநாடு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.முஹம்மது அயூப்கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் ஆரிப்கான், மாவட்ட பொருளாளர் ரஹ்மான்அலி, துணைத்தலைவர் பசீர், துணைச்செயலர்கள் தினாஜ்கான், நஸ்ருதீன், சித்திக், ஜஹாங்கீர், சீனி முன்னிலை வகித்தனர். மாநில செயலர் நெல்லை பைசல் சிறப்புரையாற்றினார்.இராமநாதபுரத்தில் செப்.29ல் நடைபெறவுள்ள தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டை வெற்றிபெற செய்தல்,காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து 370 வது ஏ பிரிவை நீக்கி காஷ்மீர் மாநில மக்களை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்தல்,இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!