18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடகம் மூலம் நன்னெறி கல்வி வாயால் நல்ல வார்த்தை பேசுவேன்.. கைகளால் பிறருக்கு உதவி செய்வேன் ..உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் ……

நாடகம் மூலம் நன்னெறி கல்வி வாயால் நல்ல வார்த்தை பேசுவேன்.. கைகளால் பிறருக்கு உதவி செய்வேன் ..உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் ……

எழுதியவர்: mohan September 3, 2019, 7:27 pm

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கல்வியோடு நற்பண்புகளையும் கற்றுத்தரும் நாடகங்கள் நடித்து காண்பிக்கப்பட்டது.ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நாடக ஆசிரியர் செல்வம் மாணவர்களுக்கு நாடகம் மூலம் நற்பண்புகளை விளக்கி நடித்து காண்பித்தார்

.கால்களால் நல்ல பாதையில் நடப்பேன்,வாயால் நல்ல வார்த்தை பேசுவேன்,கைகளால் பிறருக்கு உதவி செய்வேன்,கண்களால் நல்லதையே பார்ப்பேன்,காதுகளால் நல்லதயே கேட்பேன் என்று கூறி மாணவர்களை நாடகம் நடிக்க வைத்து ,உறுதிமொழி சொல்ல சொன்னார்.உண்மையாக இருக்கவே வேண்டும்,எந்த செயலாக இருந்தாலும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்,யாராவது கீழே விழுந்தால் பார்த்துக்கொண்டு போகக்கூடாது ,உதவி செய்யவேண்டும் போன்ற விஷயங்கள் நாடகம் மூலம் வலியுறுத்தப்பட்டது.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!