17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகு தண்டுவடம் பாதித்த 13 வயது சிறுவனுக்கு புதுச்சேரியில் சிகிச்சை உரிய நேரத்தில் உதவிய தமுமுக.,

முதுகு தண்டுவடம் பாதித்த 13 வயது சிறுவனுக்கு புதுச்சேரியில் சிகிச்சை உரிய நேரத்தில் உதவிய தமுமுக.,

எழுதியவர்: mohan September 3, 2019, 6:48 pm

இராமநாதபுரம் அருகே அழகன்குளத்தைச் சேர்ந்த நயினா முகமது மகன் அமீருல், 13. புற்றுநோய் பாதிப்பால், அவனது முதுகு தண்டுவடம் செயலிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில், உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அபாயம் உணர்ந்து எட்டு மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுவனது உறவினர்கள், தமுமுக.,விடம் உதவிக்கரம் கோரினர். இதை தொடர்ந்து நோய் பாதித்த சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. புதுச்சேரி துரிதமாக செல்ல தமுமுக.,வினர் இராமநாதபுரம் – புதுச்சேரி இடையே அனைத்து பகுதிகளிலும் உள்ள தமுமுக., முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்2 சமூக வலைத்தளங்களில் தகவல் பதிவு செய்கனர். இத்தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் – புதுச்சேரி போலீசாரை தொடர்பு கொண்டு உதவி கோரினர். பல்வேறு சமூக அமைப்பு ஆர்வலர்கள் சாலைகளில் இதர வாகனங்கள் குறுக்கிட வண்ணம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிறுவனை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கடக்கும் பகுதி குறித்து வாட்ஸ் அப் மூலம் தகவல் பகிர்ந்து, போலீசார் உதவியுடன் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் இடையூறு இன்றி குறித்த நேரத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை அடைய உதவினர்.ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் வழியாக 366 கி.மீ., தூரத்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4:30 மணி நேரத்தில் ஆம்புலன்ஸை துரிதமாக ஓட்டி வந்த தமுமுக., ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாஸ், தடையின்றி ஆம்புலன்ஸ் செல்ல உதவியோருக்கு பாராட்டு‌கள் குவிந்து வண்ணம் உள்ளன. 366 கி.மீட்டரை போக்குவரத்திற்கு இடையே கடக்க 8 மணி நேரம் பிடிக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையை அடைந்தால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என சினிமாக்களில் டாக்டர்கள் கூறுவதை கேட்டு பட ஹீரோ தான் இது போன்று சாமர்த்தியாக செயல்படுவதை பார்த்துள்ளோம். இது சினிமா அல்ல. நிஜமாக நடந்த சம்பவத்தில் தன்னம்பிக்கையுடன் துரிதமாக செயல்பட்ட ஜாஸ் உள்ளிட்ட தமுமுக.,வினர் நிஜ ஹீரோக்களெ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!