17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை மாவட்டத்தில்தேவாலயங்கள் தாக்குதல்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்தேவாலயங்கள் தாக்குதல்.

எழுதியவர்: mohan September 3, 2019, 6:32 pm

திருவண்ணாமலை தேனிமலைப் பகுதியில் செயல்பட்டு வரும் “ஆற்காடு லூத்தரன் திருச்சபை” கடந்த 28 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவு மதவெறி விஷமிகள் சிலர் திருச்சபையின் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருச்சபையின் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.மேலும் அதே பகுதியில் உள்ள “ரோமன் கத்தோலிக்க குழந்தை இயேசு ஆலயம்”கேட்டின் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர்.சத்தம் கேட்டு ஆலயத்திற்கு உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபொழுது மதவெறி விஷமிகள் ஓடிவிட்டனர்.இதனால் அப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஆற்காடு லூர்தரன் திருச்சபை சார்பில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேவாலயத்தை சேதப்படுத்திய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!