18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முகம்மது சதக் அறக்கட்டளை நிறுவனர் நாள்..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முகம்மது சதக் அறக்கட்டளை நிறுவனர் நாள்..

எழுதியவர்: mohan September 3, 2019, 6:16 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முகம்மது சதக் அறக்கட்டளை நிறுவனர் நாள் இன்று ( 03.09.19 )  காலை 11.00 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த இரண்டாமாண்டு மாணவி N.பாத்திமா ஷிபானா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால், முகம்மது சதக் முன்னாள் நிறுவாக அறக்கட்டளைத் தலைவர் அகமது ஜலாலுதீன் சிறப்பையும்,  முகம்மது சதக் நிறுவனத்தின் சிறப்பையும் எடுத்துரைத்து வரவேற்புரை ஆற்றினார்.

முகம்மது சதக் நிறுவனத்தின் தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H.சர்மிளா, நிர்வாக இயக்குனர் ஹமீது இபுராஹிம் இந்நிகழ்வை வாழ்த்தினார்கள். முகம்மது சதக் நிறுவனத் தலைவர்  சாதி, மதம் பேதமின்றி அறிவிற்கு முதன்மை வகிக்கும் நிறுவனம் என்றும், நிறுவாக வரலாற்றையும், கல்வியின் சிறப்பையும் கூறி தலைமையுரை ஆற்றினார்.

கல்லூரி அறக்கட்டளை சிறப்பை Dr.R.நதியா, தமிழ்துறை, உதவிப் பேராசிரியை அவர்களும், ஆங்கிலத் துறையைச் சார்ந்த இரண்டாமாண்டு மாணவி S.பாத்திமா மரியம் பேசினார்கள்.

சிறப்பு விருந்தினர் Dr.S.சுகதாரஹிமா,M.Sc,Ph.D., உதவி சுரங்க புவியியல் வல்லுநர், இராமநாதபுரம்  அவர்களுக்கு முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்  பெண்கள் நிமிர்ந்த நடையும் நேர்க்கொண்ட பார்வையும் மேற்க்கொள்ள வேண்டும் என்றும் சமூக வலைதளக்களில் நன்மையை பயன்படுத்த வேண்டும் என்றும் சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து S.துர்கா ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியை நன்றியுரை வழங்கினார். இறுதியாக வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் இரண்டாமாண்டு மாணவி M.ஃபாரிகா பர்வின் தூஆ வுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!