18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூகப்பணியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா SDPI கட்சி..

சமூகப்பணியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா SDPI கட்சி..

எழுதியவர்: mohan September 3, 2019, 6:05 pm

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கீழக்கரையில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக அமைந்திருக்கும் மதுக்கடைக்கு(கடை எண் 6842,6843) எதிராக பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்துள்ளது கீழக்கரை நகர் எஸ்டிபிஐ.அதன் ஒரு பகுதியாக கடந்த 1/9/2019 அன்று இரு மதுக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கீழக்கரை நகர் டிஎஸ்பி மற்றும் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்கள் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.,

இதனைத்தொடர்ந்து இன்று(3/9/19) கீழக்கரை நகர் காவல் ஆய்வாளர் நகர் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் துணைத்தலைவர் ஹாஜா அலாவுதீன், சலீம் இணைச்செயலாளர்கள் சுபைர் ஆப்தீன், முர்ஸ்லீன் நகர் செயற்குழு உறுப்பினர்கள் காதர், அஸ்ரப், அய்யூப் மற்றும் இவர்களுடன் தொகுதி துணைத்தலைவர் சித்தீக் மரியாதை நிமித்தமாக காவல் ஆய்வாளரை சந்தித்தனர்,ஆய்வாளர்  கூறியதாவது.,

எஸ்டிபிஐ கட்சி மதுக்கடைக்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்திற்கு முதலாவதாக வாழ்த்துக்கள் . மது இல்லாத கீழக்கரையை உருவாக்குவோம் என்றும் அதற்கு எஸ்டிபிஐ யும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.மேலும் கீழக்கரையில் நிலவிவரும் கஞ்சா விற்பனையும் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்கள்., சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உபயோகம் பெருகிவரும் இந்த நிலையில் அதனை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் மேலும் சிறார்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களால் வரும் விளைவுகள் சம்பந்தமாக எஸ்டிபிஐ மற்றும் காவலர்கள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.,இன்னும் கீழக்கரையில் பிரதான சாலைகளில் பள்ளி நேரங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது .அதனை சரிசெய்யும் விதமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்கள், அதற்கு எஸ்டிபிஐ கட்சியும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நகர தலைவர்  கூறி அவர்களது பணி சிறக்க கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!