நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.குற்றாலம் மெயினருவியில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி நீர் கொட்டிவருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயினருவியில் பொதுமக்கள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள் என்பதால் குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்பிடிப்பு உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.இந்நிலையில் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.