கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களினால் உயிர் இழப்புக்களை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல், மது அருந்திவிட்டு, அதி வேகமாகவும் பைக் ஓட்டி செல்பவர்கள்,சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்கள் மீதும் மற்றும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டி சென்றால்,அவர்களின் பெற்றோர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில் போக்குவரத்துபிரிவு ஆய்வாளர்மகேஸ்வரி சாலை பாதுகாப்பு மற்றும் ஓட்டுனர் விதிமுறைகள் குறித்து குளச்சல் பகுதியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ,புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் 2019 -ன் படி அதிகரிக்கப்பட்ட அபராத தொகை உள்பட போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்டி செல்ல வேண்டும் என்பது குறித்த துண்டு பிரசுரம் விநியோகித்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி வந்தவர்கள்,சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டி வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.