18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜசிங்கமங்கலத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

இராஜசிங்கமங்கலத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

எழுதியவர்: mohan September 2, 2019, 11:47 am

 இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் பசுமை இராஜசிங்கமங்கலத்தை உருவாக்கும் நோக்கத்தோடு  மரக்கன்றுகள் நடப்பட்டது..இந்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கி வைத்தார்.இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், இராஜசிங்கமங்கலம் இஸ்லாமிக் சோசியல் சர்வீஸ் மலேசியா நிர்வாக குழு உறுப்பினர் பகுர்தீன், முன்னாள் மாணவர்கள் சங்க துணைப் பொருளாளர் ஆசிரியர் சதக் , இளையான்குடி ஒன்றிய பொறுப்பாளர் சேவியர் மற்றும் ஒலி இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் மாணவர்கள் , பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க உறுதி எடுத்தனர். மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேலியும் அமைத்து கொடுக்கப்பட்டது. மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. மரக்கன்றுகள் நடும் பணியின் இறுதியில் இறைவன் மழையை பரிசாக தந்தான்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!