17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » காவலாளியை மிரட்டியவா்கள் கைது

காவலாளியை மிரட்டியவா்கள் கைது

எழுதியவர்: mohan September 1, 2019, 5:11 pm

கன்னியாகுமரி மாவட்டம் முக்கூடல் அணையின் சிறுவர் பூங்காவில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் சுதாகரன் (38) . இவர் கடந்த 20.08.2019 அன்று பணியில் இருந்த போது கல்லூரி மாணவர்கள் சில பேர் முக்கூடல் அணையை சுற்றி பார்க்க வந்துள்ளனர். அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படவே அதில் ஒரு பிரிவு மாணவர்கள் ரவுடியான ராஜவேல்(29) மற்றும் சுரேஷ்(21) துணைக்கு அழைத்து மற்றொரு பிரிவினரை தாக்கியுள்ளனர். இதனை கண்ட சுதாகரன் அவர்களை இங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜவேல் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சுதாகரனை கெட்டவார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்து வேலையை விட்டு செல்லுமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் சுதாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பூதபாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்ஜெயசேகர் குற்றவாளி இருவரையும் கைது செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.

செய்தி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!