17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூவின் விலை வெகுவாக சரிந்துள்ளது. விவசாயிகள் வேதனை.

உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூவின் விலை வெகுவாக சரிந்துள்ளது. விவசாயிகள் வேதனை.

எழுதியவர்: mohan September 1, 2019, 3:22 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளான வகுரணி, சந்தைப்பட்டி, கல்லூத்து, செட்டியபட்டி போன்ற பகுதிகளில் மல்லிகைப் பூ அதிகம் பயிருட்டுள்ளனர்.இவை நல்ல விளைச்சலைக் கண்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் உசிலம்பட்டி பூமார்க்கெட்டில் வரத்து அதிகமாக உள்ளதால் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக சரிந்துள்ளது. 1கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ 500க்கு விற்பனை செய்யபடுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். உசிலம்பட்டியில் பூக்களின் விலை குறைவாக உள்ளதால் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ஆண்டிபட்டி, மதுரை மாட்டுத்தாவணி மார்கெட்டில் உள்ள பூ வியாபாரிகள் உசிலம்பட்டி பூ மாhக்கெட்டிற்கு படையெடுத்துவருகின்றனர். இதே போல் உசிலம்பட்டியில் மற்ற பூக்களின் விலையும் குறைந்துள்ளது. பிச்சி பூ 300 ரூபாய்க்கும், செவ்வந்திபூ 80க்கும், கோலிகொண்டை, 10ரூபாய்க்கும், சம்பங்கி 150க்கும், கனகாம்பிரை பூ 250க்கும், துளசி 1கட்டு 50க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.. மல்லிகைப்பூ விலையில்லாததால் தேக்கிவைக்கும் கூூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு மல்லிகைப்பூ சென்டுபேக்கடரி அமைக்க தமிழக அரசுக்கு பூவியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!