17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே லாரி மீது பஸ் மோதல் ..அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்

நிலக்கோட்டை அருகே லாரி மீது பஸ் மோதல் ..அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்

எழுதியவர்: mohan September 1, 2019, 2:56 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொடைரோடு பகுதியிலிருந்து ஒரு தனியார் பஸ் கொடைக்கானலை நோக்கி சென்று கொண்டிருந்தது..அதே சாலையில் சோழவந்தானில் இருந்து செம்பட்டி யை நோக்கி  சென்று கொண்டிருந்த லாரி நிலக்கோட்டை அருகே  லாரி டிரைவர் மணிகண்டன் திடீரென லாரியை பிரேக் போட்டதால் பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் லாரி மீது. மோதியது இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.இதில் டிரைவர் உள்பட யாருக்கும் சேதம் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். செம்பட்டி க்கு நேராக கொடை ரோடு வழியாக செல்லக்கூடிய லாரி டோல்கேட் கொடைரோடு சுங்க வரி செலுத்துவதற்கு பயந்துகொண்டு நிலக்கோட்டை வழியாக லாரி வந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள், மற்றும் போலீசார்கள் கருத்து தெரிவித்தனர். எனவே முறையாக சுங்க வரி செலுத்தி டோல்கேட் வழியாக இதுபோன்ற லாரிகள் செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்..காலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!