திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தலைவன் கோட்டையை சேர்ந்தவர் திருநீலகண்ட பாண்டியன். இவர் அதிமுக பிரமுகராகவும்,கூட்டுறவு சங்க துணைத்தலைவராகவும் உள்ளார்.இவருக்கும் அதே கூட்டுறவு சங்க தலைவர் தலைவன் கோட்டை பகுதியை சேர்ந்த விஜயபாண்டியன் என்பவருக்கும் இடையே கொடுக்கல் – வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் 31.08.19 மாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திருநீலகண்ட பாண்டியன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் இறந்தார்.இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதன் அருகிலுள்ள கிராமமான நெற்கட்டும் செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவிற்கு இன்று தமிழக துனை முதல்வர் O. பன்னீர் செல்வம், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.