18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு எழுச்சி பொதுக் கூட்டம்

இராமநாதபுரத்தில் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு எழுச்சி பொதுக் கூட்டம்

எழுதியவர்: mohan September 1, 2019, 12:06 pm

சுதந்திர இந்தியாவில் அரங்கேறும் தொடர் கூட்டு படுகொலை, மத ரீதியான தாக்குதலை கண்டித்து பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு – தேசிய அளவிலான பிரசாரம் ஜூலை 15ல் தொடங்கியது. இந்தியா முழுவதும் பொதுக் கூட்டங்கள், தெரு முனை பிரசாரங்கள், கருத்தரங்குகள், துண்டு பிரசுரம் விநியோகம் என பல்வேறு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் சந்தை திடலில் பொதுக் கூட்டம் ஆக 31 இரவு நடந்தது. பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இபுராஹீம் வரவேற்றார். மாவட்ட செயலாலர் நியாஸ் கான், எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், எஸ்டிடியூ மாவட்ட தலைவர் முஸ்தாக் அஹமது, கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமது நிஜாம், விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட தலைவர் சஹிலா பேகம், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட தலைவர் முகமது ஹாலிது (சதக்கி) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா தேசிய பொது செயலாளர் முகமது அலி ஜின்னா, எஸ்டிபிஐ ., மாநில செயலாளர் அஹமது நவவி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஷீர் அலி நன்றி கூறினார். இக் கூட்டத்தில் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!