திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் தெற்கு காவல்துறை சார்பாக பாரதிபுரம் கோபிமீட்டிங் ஹாலில் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்து விதிகள்
குறித்தும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், ஆணவக்கொலை குறித்தும், சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்த அறிவுரைகளை கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிஸ்கட் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிகள் சார்புஆய்வாளர் வேலுமணி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
எழுதியவர்: mohan August 31, 2019, 6:57 pm




You must be logged in to post a comment.