17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

செங்கத்தில் குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

எழுதியவர்: mohan August 31, 2019, 1:25 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சென்ற மாதம் நெடுஞ்சாலை துறை சார்பாக பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்த நிலையில் பல வருடங்களாக கால்வாயை சுத்தம் செய்யப்படாததால் இதை பயன்படுத்தி செங்கம் பேரூராட்சி ஊழியர்கள் கால்வாயை சுத்தம் செய்து வந்தனர்,அதன் கழிவுகளை கொண்டு வந்து செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் s.v மஹால் எதிரில், இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்வதால் அந்த இடம் தற்போது குப்பைக் கிடங்கு பொருள் காட்சியளிக்கிறது, . இதனால் அவ்வழியே கடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டினர் பொதுமக்கள் மிகவும் துர்நாற்றத்துடன் இந்த பாதையை கடந்து செல்கின்றனர். இதை அறிந்தசெங்கம் செய்யாறு சேர் அமைப்பு குழுவினர் செங்கம் பேரூராட்சிக்கு சென்று முறையிட்டு இதனை சுத்தம் செய்ய கேட்டுக் கொண்டனர், ஆனால் இதை சுத்தம் செய்ய வேண்டிய செங்கம் பேரூராட்சி ஊழியர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த பேரூராட்சி ஊழியருக்கு உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்களின் கோரிக்கை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!