17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்

எழுதியவர்: mohan August 31, 2019, 1:19 pm

கன்னியாகுமரி மாவட்டம் , வழிபாட்டு தலங்கள் மற்றும் விழா நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்தகூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது . இதனையடுத்து கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்  அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் வழிபாட்டு தலங்களில் மீண்டும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்ததையடுத்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.  குளச்சல் பகுதியில் அதன் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் .கார்த்திக்  மேற்பார்வையில் குளச்சல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பின் பேரில் 9 வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்திய வழிபாட்டு தல நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!