17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டோவில் அடிபட்ட கன்று; பாசப் போராட்டம் நடத்திய தாய்..!

ஆட்டோவில் அடிபட்ட கன்று; பாசப் போராட்டம் நடத்திய தாய்..!

எழுதியவர்: mohan August 31, 2019, 12:09 pm

ஆட்டோ மோதியதில் அடிபட்டு உயிருக்கு போராடிய தனது கன்றுக் குட்டியைப் பார்த்து பதறிய தாய்ப் பசு, கன்றை நாவால் தடவி பாசப் போராட்டம் நடத்தியக் காட்சி கண்டோரின் கண்களில் நீரை வரவழைத்தது.திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகருக்கு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. காஜாமலை காலனி அருகே அந்த ஆட்டோ சென்றபோது, ரோட்டின் குறுக்கே ஓடிவந்த கன்றுக் குட்டி மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், ஆட்டோ டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஆட்டோ மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கன்றுக் குட்டி, படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து ஆட்டோவை தூக்கி நிறுத்திவிட்டு கன்றுக் குட்டியை மீட்க முயற்சி செய்தனர்.அதற்குள் அங்கு சில பசுக்களுடன் ஓடிவந்த கன்றின் தாய், அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை நாவால் தடவிக் கொடுத்தபடியே சுற்றி நின்றவர்களைப் பார்த்து பெருங்குரலில் கத்தியது. அந்த கத்தலில், ‘என் பிள்ளையை யாராவது காப்பாற்றுங்களேன்…’ என்ற கெஞ்சல் தெரிந்தது.இதையடுத்து, காயமடைந்த கன்றுக் குட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பொதுமக்கள், மேல் சிகிச்சைக்காக அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கன்றுக் குட்டிக்குயை அனுப்பிவைத்தனர். அதன் பின்னரே தாய்ப் பசு சற்று அமைதி அடைந்தது. இந்தக் காட்சி, அங்கிருந்தவர்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!