தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய் (35). மருத்துவ பிரதிநிதி. இவர் திண்டுக்கல் பஸ் நிலையத்தில், தேனி செல்லும் அரசு பஸ்சில் ஏறி நேற்று29.08.19 மாலை 4 மணிக்கு அமர்ந்து இருந்தார். அப்போது கண்டக்டர் அலெக்ஸ், டிக்கெட் கேட்டுள்ளார். ‘‘பஸ் எப்போது கிளம்பும்’’ என விஜய் கேட்டுள்ளார். இதற்கு கண்டக்டர், ‘‘இன்னும் 10 நிமிடத்தில் கிளம்பி விடும்’’ என கூறினார். ‘‘அதற்குள் டிக்கெட் போட வேண்டுமா’’ என விஜய், கண்டக்டர் அலெக்ஸ் மற்றும் டிரைவர் தினகரனை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கண்டக்டரும், டிரைவரும் விஜயை தாக்கி பஸ்சில் இருந்து கீழே தள்ளினர். பின்பு பஸ்சில் இருந்து இறங்கி வந்தும் டிரைவரும், கண்டக்டரும் விஜயை தாக்கினர். பஸ் ஸ்டாண்டில் ஏராளமான பயணிகள் மத்தியில் பயணி ஒருவரை டிரைவர், கண்டக்டர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து டிரைவர், கண்டக்டர் மீது விஜய், திண்டுக்கல் நகர் போலீசில் புகார் அளித்தார். தாக்குதலில் காயமடைந்த விஜய், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே போல கண்டக்டர் அலெக்ஸ், டிரைவர் தினகரன் தங்களை விஜய் தாக்கியதால், காயமடைந்ததாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் விஜய் மீது போலீசில் அளித்துள்ளனர். திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் இருதரப்பு புகார் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பயணி மீது டிரைவர், கண்டக்டர் தாக்குதல்.. போலீசார் விசாரணை…
எழுதியவர்: mohan August 30, 2019, 11:32 am




You must be logged in to post a comment.