17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான டாக்டர் அபி சரவணன்.!

பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான டாக்டர் அபி சரவணன்.!

எழுதியவர்: mohan August 30, 2019, 10:02 am

தற்போது மலேஷியாவின் தேசம் ஊடக சாதனையாளர் விருது விழாவில், அகில உலக அளவிலான நடிகர்களில் சிறந்த சமூக சேவகர் விருது பெற்றார்.!மலேஷியா மண்ணின் முன்னணி பத்திரிகை நிறுவனமாகத் திகழும் “தேசம் ஊடகம்” நடத்திய 2018, 2019 ம் ஆண்டிற்கான தேசம் சாதனையாளர் விருது விழாவில் பல்வேறு சாதனையாளர்களுக்கு மொத்தம் 130 விருதுகள் வழங்கி வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.மலேசியா சாதனையாளர் புத்தகத்தில் பெயர் பதித்த தேசம் விருது விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 8 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.தேசம் பத்திரிகை நிறுவனர் குணாளன் மனியம் தலைமையில் கடந்த 24/08/2019 அன்று மலேசியா தலைநகரமான கோலாலம்பூரில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த தேசம் சாதனையாளர் விருது விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் பிரபல நடிகருமான டாக்டர் அபி சரவணன் அகில உலக அளவிலான நடிகர்களில் “சிறந்த சமூக சேவகருக்கான” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.சமீப காலங்களில் தமிழகத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று எவ்வித பிரதிபலனும் பாராமல் தமது சொந்த பணத்தை கொண்டு உதவிகள் செய்ததும்,அதே போல் தேனி குரங்கனி மலை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தது, சமீபத்தில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பயணம் செய்து விவசாயிகளுக்கு ஆடு மாடுகள் வழங்கியது, ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தது, மிகவும் முக்கியமாக அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடும் மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் கூட செல்ல முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு பல நூறு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்து வந்த நிலையில் தமிழகத்தில் இருந்து டாக்டர் அபி சரவணன் லட்சக்கணக்கான அத்தியாவசிய பொருட்களுடன் நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து உணவு, உடை, தண்ணீர், போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார், இதன் காரணமாகவே டாக்டர் அபி சரவணன்  அகில உலக அளவிலான நடிகர்களில் சிறந்த சமூக சேவகர் என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விருதை மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் வழங்கி கௌரவித்தார்.நடிகர்கள் பலர் பணம் ஒன்றே குறிக்கோளாக வைத்து செயல் பட்டு வரும் நிலையில் நடிகர்களில் இப்படியும் ஒரு சமூக ஆர்வலரா என்று அந்த அரங்கில் குழுமியிருந்த அதிகாரிகளும் பொது மக்களும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் அபி சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி பாராட்டி மகிழ்ந்தனர்.மேலும் டாக்டர் அபி சரவணன் பல்வேறு வகையான சாதனைகளுக்காக பல விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.”மண்ணின் மைந்தன்””தங்க மகன்””அகில உலக அளவிலான நடிகர்களில் சிறந்த சமூக சேவகர்”இன்னும் பல்வேறு வகையான விருதுகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!