திருவண்ணாமலை நகரில் உள்ள புதுத்தெரு ஏழாவது தெருவில் வசிக்கும் குமார் என்பவர் மகன் சதீஷ்குமார் மற்றும் சேட்டு என்பவரது மகன் சிவா ஆகிய இருவரும் டெங்கு காய்ச்சலாள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருவண்ணாமலை நகரில் உள்ள டேனிஷ் மிஸன் மேல் நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் சதிஷ்குமார் மற்றும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் சிவா ஆகிய இரண்டு பேருக்கும் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்கள் காய்ச்சல் குணமடையததால் தி.மலை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் இன்று அனுமதித்துள்ளனர்.மருத்துவர்கள் சோதித்ததில் சதிஷ் மற்றும் சிவா ஆகிய இருவருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை .
எழுதியவர்: mohan August 29, 2019, 8:56 pm




You must be logged in to post a comment.