18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடி அருகே மஞ்சூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

பரமக்குடி அருகே மஞ்சூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

எழுதியவர்: mohan August 29, 2019, 8:43 pm

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.77.23 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ்வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிலையில் உள்ள அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் விதமாக மாதந்தோறும் ஒருகிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கிகூறப்படுகிறது. பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் விழிப்புணர்வு காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்களிலும் ஆக. 21 முதல் 31 வரை, தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இதுவரை 265 கிராமங்களில் இச்சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5,600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன.மீதமுள்ள கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் மீது தீர்வு காண அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்நிலை புனரமைப்பு பணிகளில் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்” என்பதை அடிப்படையாகக் கொண்டு சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சிகளிலும் திறந்த வெளி மலம் கழித்தலற்ற முழு சுகாதார ஊராட்சிகளாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பகுதி மக்கள் தங்களது வீடுகளில் உள்ள கழிப்பறைகளை முறையாக பராமரித்து பயன்படுத்தவேண்டும். இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் நோய்களை தடுக்கலாம். தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு முறை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிப்பு அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது. பொதுமக்கள், வணிகர்கள் , வியாபாரிகள், உணவு விற்பனையாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றார். பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராமன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சிவசங்கரன், மாவட்;ட வழங்கல் அலுவலர் மதியழகன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணக்கண்ணன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கோபு, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் ராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!