17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மீனவ சமுதாய இளைஞர்கள் இந்திய பாதுகாப்பு துறை பணியில் சேர சிறப்பு பயிற்சி விழிப்புணர்வு கருத்தரங்கு

மீனவ சமுதாய இளைஞர்கள் இந்திய பாதுகாப்பு துறை பணியில் சேர சிறப்பு பயிற்சி விழிப்புணர்வு கருத்தரங்கு

எழுதியவர்: mohan August 29, 2019, 8:33 pm

இந்திய கடலோரக் காவல் படை மற்றும் கடற்படை பணியில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சேருவதற்கானபயிற்சிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் தமிழ்நாடு மீன் வளத் துறை சார்பில் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி கூட கருத்தரங்கு கூடத்தில்  நடைபெற்றது.மண்டபம் மீன் வளத் துறை உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின் தலைமை வகித்தார். பாதுகாப்பு அகாடமி இயக்குநர் ஏ.சுரேந்திரன் கூறுகையில் விழுப்புரம், கடலூர், சீர்காழி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமுதாய இளைஞர்கள் இந்திய பாதுகாப்பு அமைப்புகளான கடலோரக் காவல், கப்பற்படையில் நேவிக்(பொதுப்பணி), மாலுமி உள்ளிட்ட பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வில் பங்கேற்பது தொடர்பாக பயிற்சி அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி இப்பயிற்சியில் சேர விரும்பும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 17- 22 வயது, குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம், பார்வை திறன் 6/6- 6/9 உடைய இளைஞர்கள் கல்வி தகுதி அடிப்படையில் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். இவர்களுக்கு சென்னையில் 3 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் அடிப்படையில் இந்திய கடலோரக் காவல், கப்பற்படை, விமானப் படை ஆகியவற்றில் பொது பிரித, மாலுமி ஆகிய பணிகளுக்கான எழுத்து, உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டு எளிதில் சேர வாய்ப்புண்டு என்றார். இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் , பாம்பன், மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் , மீனவ இளைஞர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மீன் வள ஆய்வாளர்கள் ரகுமத்துல்லா கான் (ராமேஸ்வரம் ), சகுபர் சாதிக் (மண்டபம்), மீன்வள சார் ஆய்வாளர் தர்மதுரை, மீன் வள மேற்பார்வையாளர் சர்புதீன் ஆகியோர் ஏற்பாடுகள் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!