17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு.

உசிலம்பட்டியில் போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு.

எழுதியவர்: mohan August 29, 2019, 6:44 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக தேனி, போடி, கேரளா, திண்டுக்கல், திருநெல்வேலி கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லுவதற்காக தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன. இந்நிலையில் உசிலம்பட்டியின் ரவுன்டானா பகுதியான தேவர்சிலை அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகனை சாலையிலே வழிமறித்து சோதனையில் ஈடுபடுகின்றனர். இதனால் பின்னால் வரும் அரசு மற்றும் தனியார் பேருந்தை இயக்கும் வான ஓட்டிகள் பெரிதும் சிரமபட்டுவருகின்றனர். பெரும்பாலும் சரக்கு வாகனங்களை சோதனை செய்வதலில் ஆர்வம் காட்டாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களையே வழிமறிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். போக்குவரத்தை சரிசெய்யும் போலீசாரே போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடத்தில் போக்குவரத்து போலீசார் வாகனசோதனை செய்யாமல் வேறு இடத்தில் சோதனை மேற்கொண்டால் நெரிசலை தவிர்க்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!